பெங்களூரூ ஆர்எஸ்எஸ் பிரமுகர் ருத்ரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவரை மும்பையில் என்ஐஏ கைது செய்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர் ருத்ரேஷ் பெங்களூருவில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) இன் முக்கியத் தலைவரான முகமது கௌஸ் நியாசிக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அவன் தலைமறைவானார். நியாசி குறித்து தகவல் அளிப்பவர்க
ளுக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவன் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றியதால் அவனை பிடிப்பதில் என்ஐஏ அதிகாரிகளுக்கு கடும் சவாலாக இருந்தது.
குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) நியாசியின் நடமாட்டத்தைக் கண்காணித்து, முக்கியமான தகவல்களை மத்திய நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் தான்சானியாவில் இருந்து மும்பை வந்த முகமது கௌஸ் நியாசியை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.