பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரீஃப் நாளை பதவியேற்கிறார்.
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது கட்சியின் சுயேட்சையாக போட்டியிட்டு அதிக இடங்களைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல், பிலால் புட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து புதிய ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டு பொது வேட்பாளராக ஷாபாஸ் ஷெரீஃப் மனுத்தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து பிடிஐ கட்சி சார்பில் உமர் அயூப் கான் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதில் ஷாபாஸ் ஷெரீஃப் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரீஃப் நாளை பதவியேற்கிறார்.