இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் மதியம் 1.15 மணி அளவில் சென்னை விமான நிலையம் வருகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு செல்கிறார். அங்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரூ.400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள விரைவு எரி பொருள் மறுசுழற்சி உலையை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். பிறகு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி மாலை 4.30 மணியில் அளவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.
இந்நிலையில் தமிழக பயணம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் மார்ச் 4ம் தேதி சென்னையில் இருப்பேன், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுகிறேன். மேலும் நகரில் தமிழக பாஜக நடத்தும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றவுள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நான் நாளை, மார்ச் 4ம் தேதி சென்னையில் இருப்பேன், தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலையில் (PFBR) கோர் லோடிங் துவக்கப் பணியை பார்வையிடும் வாய்ப்பை பெறுகிறேன்.
மேலும் நகரில் @BJP4TamilNadu நடத்தும் பொதுக்கூட்டத்திலும்…— Narendra Modi (@narendramodi) March 3, 2024