என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், 140 கோடி மக்கள் என் குடும்பம்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ஊழலில் திளைத்து கிடக்கும் இண்டி கூட்டணியின் தலைவர்கள், வாரிசுகளை அரசியலில் களமிறக்கும் பணியில்டி தீவிரமாக உள்ளனர்.
நான் அவர்களை கேள்வி கேட்பதால், மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் என்று பிரதமர் கூறினார்.
என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், நாட்டின் 140 கோடி மக்களும் எனது குடும்பம், இன்று நாட்டின் கோடிக்கணக்கான மகள்கள், தாய்மார்கள், சகோதரிகள் மோடியின் குடும்பம். நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையும் எனது குடும்பம். யாருமில்லாதவர்கள், அவர்களும் மோடியைச் சேர்ந்தவர்கள், மோடி அவர்களுக்குச் சொந்தமானவர் என தெரிவித்தார்.
நாட்டு மக்கள் என்னை நன்கு அறிவார்கள், புரிந்துகொள்கிறார்கள், எனது ஒவ்வொரு தருணத்தையும் கண்காணிக்கிறார்கள். சில சமயங்களில் நான் இரவு வெகுநேரம் வரை வேலை செய்த செய்தி வெளிவரும் போது, நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் எனக்கு எழுதுகிறார்கள், நான் அதிகம் வேலை செய்ய வேண்டாம், கொஞ்சம் ஓய்வு, எடுத்துக் கொள்ளுங்கள் என தெரிவிக்கின்றனர். மக்களின் கனவுகளை நிறைவேற்ற ‘போராட்டம்’ தொடரும் என பிரதமர் உறுதியளித்தார்.
கடந்த 15 நாட்களில், விவசாயிகளுக்கான உலகின் மிகப்பெரிய சேமிப்புத் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். 18,000 கூட்டுறவு வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டன. 2000 க்கும் மேற்பட்ட ரயில்வே திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன என தெரிவித்தார்.