திமுகவுக்கு குடும்பம் முக்கியம் ; பாஜகவுக்கு மக்கள் முக்கியம் : சென்னையில் பிரதமர் மோடி பேச்சு!
Jul 24, 2025, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுகவுக்கு குடும்பம் முக்கியம் ; பாஜகவுக்கு மக்கள் முக்கியம் : சென்னையில் பிரதமர் மோடி பேச்சு!

Web Desk by Web Desk
Mar 4, 2024, 07:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுகவுக்கு குடும்பம் முக்கியம் என்றும், ஆனால் பாஜகவுக்கு மக்கள் முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை விமானம் நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றார்.

பின்னர், கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். தொடர்ந்து, பாரதிய நபிகியாவித்யுத் நிகம் லிமிடெட் நிறுவனம் உருவாக்கியுள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட வேக ஈனுலையின் ‘கோர் லோடிங்’ பணியை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொருமுறை சென்னை வரும்போது உற்சாகம் பிறக்கிறது. பாரம்பரியம் மற்றும் வணிகத்துக்கு மையப்புள்ளியாக சென்னை விளங்குகிறது. சென்னை நகரம் திறன் நிறைந்த இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னைக்கு முக்கியப் பங்கு உள்ளது.

எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நான் தமிழகத்துக்கு வருவதால் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது என தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் சென்னையின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது. சென்னை மக்களின் தேவைகளை திமுக பூர்த்திசெய்யவில்லை. திமுகவுக்கு மக்கள் துயரங்களைப் பற்றி கவலையில்லை என பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வளர்ச்சியில் சென்னையின் பங்கு முக்கியமானது. சென்னை மெட்ரோ, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட மிகப்பெரிய திட்டங்களை பாஜக அரசு கொடுத்துள்ளது. தமிழகத்தை சிறப்பானதாக மாற்ற உறுதிப்பூண்டுள்ளோம்.

தமிழகம் மற்றும் சென்னை வளர்ச்சி திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கு திமுக அரசு இடையூறு செய்கிறது. மிக்ஜாம் புயலின்போது மக்களுக்கு உதவ வேண்டிய தமிழக அரசு, அதனை ஒரு பொருட்டாகவும் கருதவில்லை. மக்களின் சுக துக்கங்களில் மாநில அரசுக்கு அக்கறையில்லை.

நீங்கள் துன்பத்தில் இருந்தபோது அவர்கள் உங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. சென்னை மக்களின் தேவைகளை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கின்றனர்

மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறது. உங்களுக்காக பணியாற்றுகிறது. மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டுள்ளது. தி.மு.க அரசின் மனக்குறை என்னவென்றால் மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு செல்கிறது என்பதே.

திமுகவுக்கு குடும்பம்தான் முக்கியம்.ஆனால் பாகவுக்கு மக்கள் மீதே அக்கறை. நீங்கள் கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்பட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு அளிக்கப்படும் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டேன். தமிழக மக்கள் ஏமாற்றப்படாமல் தடுப்பேன். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக அரசு.

உங்களுக்கு தி.மு.க.வையும் தெரியும், காங்கிரசையும் தெரியும். இவர்களை போல பலர் உள்ளனர். இவர்களின் குறிக்கோள் குடும்பம் முதலில். ஆனால் எனக்கோ நாடுதான் முதல் குறிக்கோள். மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு குடும்பம் இருப்பதால் நாட்டு சொத்தை திருடுவதா? இந்த நாடுதான் எனது குடும்பம்,நாட்டு மக்கள்தான் எனது குடும்பம். நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள், மகளிர் அனைவரும் எனது குடும்பத்தினர் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இன்று கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே உருவான ஈனுலை தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஈனுலை பணி செய்ய தொடங்கும் போது இப்படிப்பட்ட தொழில் நுட்பத்தை பெற்றிருக்கும் உலகின் 2-வது நாடாக இந்தியா இருக்கும்.

தெலுங்கானாவில் 1,600 மெகாவாட் தெர்மல் பவர் பிளான்டிற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களில் பல மாநிலங்களில் மின் சக்தி உற்பத்திக்கான ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM ModiChennaitamilnaduchennai speechpm modi in chennai
ShareTweetSendShare
Previous Post

கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டப் பணிகள் : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Next Post

BEML நிறுவனம், பெல் மற்றும் மிதானி நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies