உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் ஐஎன்-ஸ்பேஸ் தொழில்நுட்ப மையத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் திறந்து வைத்து உரையாற்றினார்.
அவர் கூறியதாவது, இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் டாலராக உள்ளது. இது 2040-ஆம் ஆண்டில் பல மடங்கு அதிகரிக்கும். உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் மனிதனை அமெரிக்கா நிலவில் இறக்கிய ஆண்டிலேயே, நமது விண்வெளி ஆய்வுத் திட்டம் தொடங்கப்பட்டாலும், விண்வெளித்துறையில் முன்னேறி வரும் நாடுகளின் நிலையை நாம் வேகமாக அடைந்து வருகிறோம். சந்திராயன்-3 திட்டத்தின் மூலம் நிலவில் யாரும் தரையிறங்காத இடத்தில், இந்தியா தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
ஆனால், மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அண்மையில் வெளியிடப்பட்ட ஏடிஎல் அறிக்கையின் படி, 2040-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி விண்வெளித் துறையை பொது-தனியார் பங்கேற்புக்கு அனுமதித்ததன் மூலம் கடந்த காலத்தின் தடைகளை உடைத்துள்ளார். விண்வெளி பட்ஜெட்டை மட்டும் பார்த்தால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் 142 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கூறினார்.