WPL : டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி !
Jun 14, 2026, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி !

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 10:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில்  டெல்லி கேபிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 12வது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மெக் லானிங் 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 38 பந்துகளில் 53 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷாபாலி வர்மா 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜெமிமா 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 33 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக இஸ்மாயில், பூஜா, மத்தியூஸ், சைகா இஷாக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதை தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய மேத்யூஸ் 29 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர்.

மும்பை அணி ரன்கள் எடுக்காமல் தடுமாறி வந்தபோது அமன்ஜோத் 42 ரன்களும், சஜீவன் 24 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனாசென் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மரிசான் கேப் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். ராதா யாதவ், டைட்டாஸ் சாது, ஷிகா பாண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

Tags: mumbai indiansWPLDelhi capitals won
ShareTweetSendShare
Previous Post

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும் – ஜிதேந்திர சிங்

Next Post

நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை : தொடங்கி வைத்து பயணம் செய்தார் பிரதமர் மோடி!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies