மக்களவை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சி அக்கட்சி தலைமை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட 195 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், பாஜக மத்திய தேர்தல் குழுக்கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். அப்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல், பிரச்சார வியூகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.