பாரத பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த துவாரகா விரைவுச் சாலையின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார்.
இந்நிலையில் தற்போது இந்த துவாரகா விரைவுச் சாலையின் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம் :
1. எட்டு வழி துவாரகா அதிவேக நெடுஞ்சாலையின் 19 கி.மீ நீளமுள்ள ஹரியானா பிரிவு தேசிய நெடுஞ்சாலை -48 இல் டெல்லி மற்றும் குருகிராம் இடையே போக்குவரத்தை மேம்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும் இந்த சாலை உதவும்.
2. துவாரகா அதிவேக நெடுஞ்சாலை சுமார் ரூ .4,100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 10.2 கி.மீ நீளமுள்ள டெல்லி –ஹரியானா எல்லை முதல் பசாய் ரயில்-ஓவர் பிரிட்ஜ் (ஆர்ஓபி) மற்றும் 8.7 கி.மீ நீளமுள்ள பசாய் ரோப் முதல் கெர்கி தௌலா வரை இரண்டு தொகுப்புகளை இந்த சாலை உள்ளடக்கியது.
3. துவாரகா விரைவுச்சாலை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் குருகிராம் புறவழிச்சாலைக்கு நேரடி இணைப்பை வழங்கும்.
4. தலைநகர் டெல்லியில் நெரிசலைக் குறைக்க என்சிஆர் பகுதியில் ரூ.60,000 கோடி நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
5. இந்த விரைவுச் சாலை ஹரியானாவில் 18.9 கி.மீ தூரத்துக்கும், டெல்லியில் 10.1 கி.மீ தூரத்துக்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லி குருகிராம் விரைவு சாலையில் (என்எச் 48) போக்குவரத்து நெரிசல் குறையும்.
6. மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், குகைப் பாதைகள், உயரமான சாலைகள் போன்றவை இந்த விரைவுச் சாலையில் இடம்பெற்றுள்ளன. விரைவுச் சாலைக்கு இரு புறமும், 3 வழி சர்வீஸ் சாலைகள் கட்டப்படுகின்றன. இந்த விரைவுச் சாலையில் ஐடிஎஸ் (Intelligent Transport System) எனப்படும் நவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
7. இந்த திட்டத்திற்கான அடிக்கல்லை மார்ச் 9, 2019 அன்று, அப்போதைய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.