பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது இருதரப்பு உறவுகள், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பிரிட்டன் பிரதமருடனான உரையாடல் இனிமையாக இருந்தது. இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர நன்மை பயக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கும் இருவரும் உறுதி பூண்டோம் என மோடி கூறியுள்ளார்.