சென்னை அடுத்துள்ள வேப்பேரியில் நடைபெற்ற கால்நடை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்துள்ள வேப்பேரியில் கால்நடை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு படித்த மாணவர்களுக்கு இன்று பட்டம் வழங்கப்படும் என முறைப்படி அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மாணவ, மாணவிகளுக்குப் பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, 1,166 பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த விழாவை, கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.
பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு செய்துள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், அண்மையில் பிரதமர் மோடி தூத்துக்குடி வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் சீன ராக்கெட் படம் போட்டு விளம்பரம் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.