வாக்களிக்கும் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அனைவரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பான எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் தங்கள் முதல் வாக்கு நாட்டிற்காக என்று கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் உற்சாகத்தை எடுத்துரைக்கும் காணொலியையும் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
நமது தேர்தல் செயல்முறையை கூடுதல் பங்கேற்புடன் மாற்றுவோம். வாக்களிக்கும் அவசியத்தை முதல்முறை வாக்காளர்கள் உள்ளிட்டோரிடம் அவரவர் பாணியில் எடுத்துரைக்க வருமாறு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Across the length and breadth of India, youngsters are saying #MeraPehlaVoteDeshKeLiye. https://t.co/UkJgMVIjxi pic.twitter.com/W0UQxKB6pu
— Narendra Modi (@narendramodi) March 14, 2024