பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி, இன்று முதல் மார்ச் 19 -ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
கோவைக்கு பாரதப் பிரதமர் மோடி வருகை தர உள்ளார். மக்களைவத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு பிரதமர் 6 -வது முறையாக வரும் 18 -ம் தேதி கோவைக்கு வருகிறார். கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி, இன்று முதல் மார்ச் 19 -ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
குறிப்பாக, துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை மற்றும் ஆர்.எஸ்.புரம் ஆகியவை ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.