தமிழகத்தில் PM Shri பள்ளிகளைத் தொடங்க திமுக அரசு முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த, 2020 -ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
இதில், காலை உணவுத் திட்டம், தன்னார்வலர்கள் மூலம் சமுதாயத்தை உள்ளடக்கிய பயிற்றுவித்தல் (இல்லம் தேடிக் கல்வி) போன்றவற்றை, வேறு வேறு பெயர்களில் செயல்படுத்திய தமிழக அரசு, தற்போது, முழுவதும் தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள, PM Shri பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பள்ளி மாணவர்கள், பல்துறை அறிவையும், பலமொழிப் புலமையும், தொழிற்கல்வித் திறனையும் ஒருங்கே பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, அடுத்த தலைமுறைக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள உதவும் கருவியாக அமையும்.
நமது மாணவர்கள் நலனுக்காக, தமிழக அரசு, அனைத்து பள்ளிகளிலும், இதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.