WPL : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய RCB !
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய RCB !

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 11:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு  நுழைந்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் 21-வது போட்டியான அரையிறுதி போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்தது.

இதில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் சோஃபி மோலினக்ஸ் தலா 10 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய திஷா டக் அவுட் ஆனார்.

அதேபோல் மற்ற வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 66 ரன்களை எடுத்து அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.

மும்பை அணியை பொறுத்த வரை  சைகா இஷாக், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், மத்தியூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 136 என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா 19 ரன்களிலும், மத்தியூஸ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  பின்னர் களமிறங்கிய  நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.  மும்பை இந்தியன்ஸ் அணி நீதமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தது.

மும்பை அணி 17 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 116 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது களத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமேலியா கேர் இருந்தனர்.

கடைசி 3 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்றே அனைவரும் எண்ணினர். ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்ததோடு ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் திணறியது மும்பை இந்தியன்ஸ் அணி.

20 ஓவர்களில் 130 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் முறையாக மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Tags: WPLRCBMIRCB into finals
Share
Tweet
SendShare
Previous Post

140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும், ஆதரவும் ஊக்கம் அளிக்கிறது : குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

Next Post

PM Shri பள்ளிகள் : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies