பாஜகவில் இணைந்தார் முன்ன்னாள் எம்ம்எல்ஏ P.K.M.முத்துராமலிங்கத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரிய ஐயா P.K.மூக்கையாத் தேவர் அவர்களது மகனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் P.K.M.முத்துராமலிங்கம் , பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியாலும், ஆளுமைப் பண்புகளாலும் ஈர்க்கப்பட்டு, மத்திய இணையமைச்சர் அண்ணன் எல்.முருகன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அண்ணன் P.K.M.முத்துராமலிங்கத்தை வரவேற்று மகிழ்வதோடு, தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் கொள்கைகளான, தேசியமும் தெய்வீகமும் தமிழகத்தில் மீண்டும் தழைத்தோங்க, அவரது அரசியல் அனுபவத்தையும், உழைப்பையும் வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளளார்.