மறக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ரஜாக்கர் திரைப்படக்குழுவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
திருவிதாங்கூர், மைசூர், ஹைதராபாத், காஷ்மீர், சுனாகத் ஆகிய ஐந்து மாநிலங்களும் பரப்பளவில் பெரிதாக, மக்கள் தொகையில் கணிசமான அளவில் இருந்தன. ஆகவே, திருவிதாங்கூர் ராஜா, மைசூர் மகாராஜா, ஐதராபாத் நவாப், காஷ்மீர் பேரரசர், சுனாகத் நவாப் ஆகிய ஐவரும், இந்தியாவுடன் தங்கள் சமஸ்தானங்களை இணைக்க மறுத்தனர்.
உடனே, படேல் ராணுவ நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தார். மைசூரும், திருவிதாங்கூரும் இந்தியாவுடன் இணைந்தன. சுனாகத் சமஸ்தான நவாபுக்கு எதிராக, அங்குள்ள மக்கள் கிளர்ச்சியில் இறங்கினர். அவர், “எனக்கு சமஸ்தானமும் வேண்டாம்; மன்னர் பதவியும் வேண்டாம் என்று குடும்பத்துடன், பாகிஸ்தானுக்கு ஓடி விட்டார்.
ஹைதராபாத் நிஜாமும், காஷ்மீர் அரசர் ஹரிசிங்கும், “எக்காரணத்தைக் கொண்டும், மன்னராட்சியை விட்டுக் கொடுக்க மாட்டோம். என்பதில் உறுதியாக இருந்தனர். இதனைத்தொடர்ந்து ஹைதராபாத்தை இந்தியா ராணுவம் முற்றுகையிட்டு நிஜாமை பணிய வைத்தது.
ஹைதராபாத் நிஜாம் ஆட்சி காலத்தில் அங்குள்ள பட்ட கஷ்டங்களை அழகான காட்சி அமைப்புகளுடன் எடுத்து கூறுகிறது ரஜாக்கர் திரைப்படம்.
இந்நிலையில்,ரஜாக்கர் திரைப்பட தயாரிப்பாளர்கள் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தனர். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், #ரஜாக்கர் நினைவுகளில் இருந்து ஒரு சிலர் அழிக்க விரும்பிய வரலாறு வெறும் வரலாற்றின் துண்டல்ல; இது தக்காணத்தில் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம் மற்றும் எதிர்ப்பின் சொல்லப்படாத கதை.
ரஜாக்கர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி மற்றும் மறக்கப்பட்ட இந்த வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததற்காக அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.