ஆந்திராவில் இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கூடட்ணி பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், பாஜக, தெலுங்கு சேதம், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், ஜனசேனா இரு இடங்களிலும் போட்டியிடுகிறது. அதேபோல் சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும்,பாஜக 10 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்நிலையில், பல்நாடு மாவட்டத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக முற்போக்கு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். தெலுங்கு சேத கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
10 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் கூட்டுப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரதேசத்தின் பொன்னான எதிர்காலத்திற்காக “கொடூரமான அரசியலை விரட்டியடிப்பதை” பிரஜாகலம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஜனசேனா தெரிவித்துள்ளது.
கூட்டத்திற்குத் தயாராகும் வகையில், மோடி, நாயுடு மற்றும் கல்யாண் ஆகியோரின் படங்கள் அடங்கிய சிறப்பு லோகோவை தெலுங்குதேசம் கட்சி வெளியிட்டது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், மக்களின் வாழ்வில் சாதகமான மாற்றத்தை கொண்டு வரவும், நாடு மற்றும் மாநிலத்தின் முன்னேற்றத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும் ஆந்திராவின் ஆசிகளை என்டிஏ நாடுகிறது என தெரிவித்துள்ளார்.