இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
அந்த தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா. அதேபோல் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரவிச்சந்திர அஸ்வின் தனது 100வது போட்டியை சந்தித்தார்.
அதேபோல் 100-வது டெஸ்டில் விளையாடிய 14-வது இந்திய வீரர் மற்றும் முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.
முன்னதாக ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த மைல்கல்லை கடந்த 9-வது வீரர், 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.
இப்படி 100 டெஸ்டில் விளையாடி இருப்பதுடன், 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு அஸ்வினை பாராட்டி பேசினார்கள். அதேபோல் அஸ்வினுடைய பவுலிங் பாட்னரான ரவீந்திர ஜடேஜா வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த காணொளியில் அவர், ” ஹாய் ஆஷ் அண்ணா. 100 போட்டிகளில் விளையாடி 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக உங்களுடைய பங்கு அபாரமானது.
நீங்கள் தொடர்ந்து நிறைய விக்கெட்டுகள் எடுத்து உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களைப்போல் ஒரு ஜாம்பவானாக வர முடியும்.
நாம் ஒரு பெயரையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். நான் ரவி இந்திரன். நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன் மீசை வைக்காதவன் சந்திரன்” என்று கலகலப்பாக பேசினார்.
அதாவது தில்லு முல்லு திரைப்படத்தில் மீசை வைத்த கேரக்டரில் வரும் ரஜினிகாந்த் இந்திரனாகவும் மீசை வைக்காத கேரக்டரில் வரும் ரஜினி சந்திரனாகவும் இருப்பார்கள்.
அதே ஸ்டைலில் மீசை வைக்காத அஸ்வின் சந்திரனாகவும் மீசை வைத்த ஜடேஜா இந்திரனாகவும் இந்திய அணியில் செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருவதாக ரவீந்திர ஜடேஜா வித்தியாசமாக பாராட்டினார்.
இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதை அவர் தமிழில் கூறினார். பின்னர் காணொளியின் இறுதியில் ‘ ”நல்ல இருக்கு அஷ் ரொம்ப நல்லாயிருக்கு, நல்ல இருக்கு அஷ் ரொம்ப நல்ல இருக்கு” என்ற ஜாலியாக கூறினார்.
Indran Calling Chandran! 📞🫂
Wishing our Tamil Singam Ash on his Spincredible 5️⃣0️⃣0️⃣! 🥳#WhistlePodu 🦁💛 @imjadeja @ashwinravi99 pic.twitter.com/EV5k1u0y7A
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2024