அஸ்வினுக்கு தமிழில் வாழ்த்துக் கூறிய ஜடேஜா !
Oct 28, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஸ்வினுக்கு தமிழில் வாழ்த்துக் கூறிய ஜடேஜா !

Murugesan M by Murugesan M
Mar 17, 2024, 06:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

அந்த தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா. அதேபோல் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரவிச்சந்திர அஸ்வின் தனது 100வது போட்டியை சந்தித்தார்.

அதேபோல் 100-வது டெஸ்டில் விளையாடிய 14-வது இந்திய வீரர் மற்றும் முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.

முன்னதாக ராஜ்கோட் மைதானத்தில்  நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த மைல்கல்லை கடந்த 9-வது வீரர், 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.

இப்படி 100 டெஸ்டில் விளையாடி இருப்பதுடன், 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு அஸ்வினை பாராட்டி பேசினார்கள். அதேபோல்  அஸ்வினுடைய பவுலிங் பாட்னரான ரவீந்திர ஜடேஜா வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த காணொளியில் அவர், ” ஹாய் ஆஷ் அண்ணா. 100 போட்டிகளில் விளையாடி 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக உங்களுடைய பங்கு அபாரமானது.

நீங்கள் தொடர்ந்து நிறைய விக்கெட்டுகள் எடுத்து உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களைப்போல் ஒரு ஜாம்பவானாக வர முடியும்.

நாம் ஒரு பெயரையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். நான் ரவி இந்திரன். நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன் மீசை வைக்காதவன் சந்திரன்” என்று கலகலப்பாக பேசினார்.

அதாவது தில்லு முல்லு திரைப்படத்தில் மீசை வைத்த கேரக்டரில் வரும் ரஜினிகாந்த் இந்திரனாகவும் மீசை வைக்காத கேரக்டரில் வரும் ரஜினி சந்திரனாகவும் இருப்பார்கள்.

அதே ஸ்டைலில் மீசை வைக்காத அஸ்வின் சந்திரனாகவும் மீசை வைத்த ஜடேஜா இந்திரனாகவும் இந்திய அணியில் செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருவதாக ரவீந்திர ஜடேஜா வித்தியாசமாக பாராட்டினார்.

இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இதை அவர் தமிழில் கூறினார். பின்னர் காணொளியின் இறுதியில் ‘ ”நல்ல இருக்கு அஷ் ரொம்ப நல்லாயிருக்கு, நல்ல இருக்கு அஷ் ரொம்ப நல்ல இருக்கு” என்ற ஜாலியாக கூறினார்.

Indran Calling Chandran! 📞🫂

Wishing our Tamil Singam Ash on his Spincredible 5️⃣0️⃣0️⃣! 🥳#WhistlePodu 🦁💛 @imjadeja @ashwinravi99 pic.twitter.com/EV5k1u0y7A

— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2024

Tags: iplcskRavichandra AshwinRavindra Jadeja
Share
Tweet
SendShare
Previous Post

விளக்கு கோபுர உச்சியில் தொண்டர்கள் : கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி!

Next Post

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 7 இராணுவ வீரர்கள் பலி!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies