இறைவன் திருவடி சேர்ந்த, கோவை காமாட்சிபுரம் ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருவுருவப் புகைப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலரஞ்சலி செலுத்தினார்.
இதுதெடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இறைவன் திருவடி சேர்ந்த, வணக்கத்திற்குரிய கோவை காமாட்சிபுரம் ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அவர்கள் மடத்திற்கு சென்று, அவரது திருவுருவப் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கினோம்.
ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க உழைத்த ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவு, சமூகத்திற்குப் பேரிழப்பாகும். அவரது பூதவுடல் மறைந்தாலும், அவரது ஆன்மீகப் பணிகளும் சமூகப் பணிகளும், அவரது நினைவை என்றும் கூறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இறைவன் திருவடி சேர்ந்த, வணக்கத்திற்குரிய கோவை காமாட்சிபுரம் ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் அவர்கள் மடத்திற்கு சென்று, அவரது திருவுருவப் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வணங்கினோம்.
ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க உழைத்த ஶ்ரீ… pic.twitter.com/U5WfGEklas
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 17, 2024