கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!
Mar 19, 2026, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Mar 18, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் பிரதமர் மோடி சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணியில் சென்றார். பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1ம் தேதி வாக்கு பதிவு முடிவடைகின்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 4ம் தேதி அந்த வாக்குகள் எனப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் இந்த மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவில் முதல் கட்டத்தில் தமிழகத்திற்கு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தியாவின் வடபகுதிகளில் பெரும் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்திருக்கும் பாஜக, தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிகளில் தங்களுடைய பலத்தை அதிகரிக்க, பல யுக்திகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக பிரதமர் மோடி  தமிழகத்திற்கு இந்த வருடத்தில் ஏற்கனவே பலமுறை மக்களை  சந்தித்துள்ளார். இந்நிலையில் கோவையில் நடைபெறும் ரோட் ஷோ ஒன்றில் பங்கேற்க கர்நாடகாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தார்.

பிரதமர் மோடி சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 2.5 கி.மீ. தொலைவிற்கு வாகன பேரணியில் சென்றார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடியுடன், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரதமர் மோடி வாகனத்தில் இருந்தபடியே மக்களுக்கு கையசைத்து தனது வணக்கங்கள் தெரிவித்தார்.  சுமார் இரண்டரை கி.மீட்டர் தூரம் பிரதமர் மோடி திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடியே சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் மக்களைச் சந்தித்தார்.

நாதஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் கலை குழுவினரால் நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்ட தோடர் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சாலையின் இருபுறங்களிலும் நின்று மோடியை பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். அவரும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தவாறு கை அசைத்தபடி வாகனத்தில் சென்றார்.

பேரணி இறுதியில் 1998 கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Tags: PM Modikovai
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர், மேகாலயாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

Next Post

பாஜகவுடன் பாமக கூட்டணி!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies