தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பாமக இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாரதப் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பாட்டாளி மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, நமது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுடன், தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணியையும், நேரில் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்தோம்.
தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, எளிய மக்களுக்கான உரிமைக்காகக் குரல் கொடுத்து ராமதாங்ஸ, வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பாட்டாளி மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, நமது மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்களுடன்,… pic.twitter.com/OD5po6AiQ9
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 19, 2024