கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கோவையில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். கோவையில் இரவு தங்கிய அவர், இன்று காலை கேரள மாநிலம் பாலக்காடு சென்றார். கோட்டமைந்தன் அஞ்சுவிளக்கிலிருந்து துவங்கிய பேரணி தலைமை தபால் நிலையம் வரை சென்றது.
அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் மலர்களை தூவி பிரதமரை வரவேற்றனர்.