அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்!
Sep 12, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்!

Murugesan M by Murugesan M
Mar 19, 2024, 12:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளை  மேற்கொள்வதில் இந்திய கடற்படை ஆற்றி வரும் முக்கிய பங்கை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்ச் 18 அன்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.

2024 பிப்ரவரியில் புதுதில்லியில் நடைபெற்ற இண்டஸ்-எக்ஸ் உச்சி மாநாடு மற்றும் இன்று (2024 மார்ச் 18) இந்தியாவில் தொடங்கியுள்ள இருதரப்பு முப்படைப் பயிற்சியான ‘டைகர் ட்ரிம்ஃப்’ போன்றவை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளை  மேற்கொள்வதில் இந்திய கடற்படை ஆற்றி வரும் முக்கிய பங்கை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டினார்.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். இந்திய கப்பல் கட்டும் தளங்களில் அமெரிக்க கடற்படை கப்பல்களை பழுது பார்ப்பது போன்ற பிற பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இந்த ஆலோசனையின்போது அவர்கள் விவாதித்தனர்.

இரு அமைச்சர்களும்  2023 நவம்பரில் புதுதில்லியில் இந்தியா அமெரிக்கா அமைச்சர்கள் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையின்போது நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Rajnath Singh's phone conversation with US Defense Minister!
Share
Tweet
SendShare
Previous Post

பல்கேரியா நாட்டு அதிபர் பிரதமர் மோடிக்கு நன்றி!

Next Post

பாலக்காட்டில் பாஜக பேரணி : மலர்களை தூவி பிரதமரை வரவேற்ற பொதுமக்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies