நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுதக் குழு ஒன்று, அங்குள்ள மக்களை கடுமையாக தாக்கி விட்டு, 100 பேரை கடத்தி சென்றுள்ளது.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில், ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இக்குழுக்கள் அப்பாவி மக்களை கடத்தி சென்று கொடுமைப்படுத்தி வருகின்றன. சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன், கதுனா மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 மாணவர்களை ஆயுதக் குழுக்கள் கடத்தி சென்றனர். மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன் 100 பொதுமக்களையும் கடத்தி சென்றுள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன், கஜுரு பகுதியில், பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர், டோகன் நோமா சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், 14 பேரை கடத்திச் சென்றனர். நேற்று இரவு மீண்டும் கஜுரு – ஸ்டேசன் சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து 87 பேரை கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.