இந்திய இளைஞர்கள் வேலை தேடுவதற்கு பதிலாக வேலை வழங்குபவர்களாக மாறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஸ்டார்ட் அப் (startup) மெகா கண்காட்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.
விழாவில் பேசிய பிரதமர், இந்திய இளைஞர்களின் திறனை உலகம் வியந்து பார்க்கிறது. அவர்களின் திறன்கள் மற்றும் முயற்சிகளை ஊக்கப்படுத்த முடிவு செய்தோம். அதன் பலன் தற்போது தெரிய தொடங்கியுள்ளது. இந்திய இளைஞர்கள் வேலை வழங்குபவராக மாற ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்தார்.
ஒரு காலத்தில் அரசாங்கத்தின் பிடியில் இருந்த விண்வெளித் துறையில் தற்போது 50க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. இந்தியா இன்று உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்அப் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
1.25 லட்சத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன.
நாட்டின் ஸ்டார்ட்அப் இதுவரை 12,000 காப்புரிமைகளை பதிவு செய்துள்ளன. 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியாவுக்கான பாதை வரைபடத்தில் நாடு செயல்படும் போது, இந்த ஸ்டார்ட்அப் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக மாறும் என பிரதமர் தெரிவித்தார்.