அசாமில் அமையவுள்ள செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை மாநிலத்தை உலக வரைபடத்தில் கொண்டு சேர்க்கும் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் அசாம் மற்றும் குஜராத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு பிரதமர் மோடி மார்ச் 13ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.இதில் இரு ஆலைகள் குஜராத்திலும் ஒரு ஆலை அசாமிலும் அமையவுள்ளது. குஜராத் மற்றும் அசாமில் தலா ஒரு ஆலையை டாடா குழுமம் அமைக்கிறது.
The upcoming ₹27,000cr Tata semiconductor facility in Assam will put us on the world semiconductor map and transform the economic landscape of East India.
On behalf of the people of Assam, today in Mumbai I conveyed our heartfelt gratitude to Shri @RNTata2000 and Shri N… pic.twitter.com/nOwNLfzU3j
— Himanta Biswa Sarma (Modi Ka Parivar) (@himantabiswa) March 20, 2024
இதுதொடர்பாக ரத்தன் டாடா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,அதில், அசாம் அரசாங்கத்துடன் இணைந்து, ஏற்கனவே மாநிலம் முழுவதும் பல புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகளை அமைத்துள்ளோம். தற்போதைய புதிய வளர்ச்சி அசாமை உலக வரைபடத்தில் கொண்டு சேர்க்கும்.. இதையெல்லாம் சாத்தியமாக்கிய அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் ஆதரவு மற்றும் தொலைநோக்கு பார்வைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
This centre will empower youths from North East by offering them courses in Artificial Intelligence, semiconductors & electronics and help them in securing jobs in the Jagiroad unit.
2/3 pic.twitter.com/j6vY9QVHmB
— Himanta Biswa Sarma (Modi Ka Parivar) (@himantabiswa) March 20, 2024
இதனிடையே வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சிப் எங்களிடம் இருக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.