ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!
Oct 17, 2026, 02:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

Murugesan M by Murugesan M
Mar 21, 2024, 12:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, வரும் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, முக்கிய  சாலைகளில் போக்குவரத்தது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.

இதன் காரணமாக, சென்னையின் முக்கிய சாலைகளில், வரும் 22 மற்றும் 26 ஆகிய நாட்களில், மாலை 5.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்து, சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை.

பெல்ஸ்சாலை தற்காலிகமாக ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பாரதி சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை x பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். பாரதி சாலை x பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.

M.T,V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.

வாலாஜா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலைக்கு செல்வதற்கு அனுமதி இல்லை. B மற்றும் R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

காமராஜர் சாலையில் இருந்து வரும் M,T,V ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள், காமராஜர் சாலையில் இருந்து வரும் B மற்றும் R ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகிசிலை, பாரதிசாலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று தங்கள் வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.  உழைப்பாளர் சிலையிலிருந்து வாகனங்கள் வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை.

அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம். காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக PWD எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

Tags: Chennaiipl crickettraffic changesma chidhambaram stadium
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரம் : ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி!

Next Post

உச்ச நீதிமன்றத்தில் ஊடக வளாகம் மற்றும் உதவி மையம் திறப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies