உச்ச நீதிமன்றத்தில் ஊடக வளாகம் மற்றும் உதவி மையத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் திறந்து வைத்தார்.
டெல்லி உள்ள உச்ச நீதிமன்றத்தில் ஊடக வளாகம் மற்றும் உதவி மையத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
“இது ஊடகங்களுக்கு மிகவும் தேவையானதாகவும் வசதியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். எங்களிடம் ஏராளமான ஊடகங்கள் உள்ளன, அவை பொது நலன் சார்ந்த விஷயங்களை உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளில் அறிக்கை செய்கின்றன.
ஒளிப்பதிவாளர்களுக்கு உட்கார இடமில்லை என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு. கோடை வெயில் மற்றும் மழை ஆகிய காலங்களில் உங்கள் வேலையைச் செய்யச் சிறப்பு வசதியாக இது இருக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
“நாங்கள் உதவி மையத்தைத் திறந்துள்ளோம், இது எங்கள் பணியின் தொடர்ச்சியாகும், நீதிபதி ரவீந்திர பட் தலைமையிலான குழு அறிக்கையை சமர்ப்பிப்பதில் தொடங்கியது.
மாற்றுத் திறனாளிகள் மட்டுமின்றி, மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறப்பு உதவி தேவைப்படும் அனைவருக்கும் உச்ச நீதிமன்றத்தை அணுகக் குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.
இப்போது, அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வசதி உள்ளது. இது ஆரம்பம்தான், நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களைக் கொண்ட குழுவின் மற்ற பரிந்துரைகளை நாங்கள் செயல்படுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.