தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் சற்று முன்னர் வெளியானது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாலை கோவையில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது X தளத்தில்,
என் மீது நம்பிக்கை வைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் என்னை போட்டியிட வைத்ததற்காகவும், தமிழகத்தை வளர்ச்சியின் தலைவிதியை நோக்கி அழைத்து செல்லும் அரசியல் மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இது வந்துள்ளது.
Heartfelt thanks to our beloved PM Thiru @narendramodi avl for constituting his faith in me and making me to contest from Coimbatore in the 2024 Parliamentary election. This comes at a time when the people of TN are awaiting a political change that will take TN towards the…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 21, 2024
இதற்காக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நமது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோருக்கு நன்றி.
தமிழகத்திற்கான முதல் தொகுதி வேட்பாளர்களின் ஒரு பகுதியாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. என் மீதும் மற்ற வேட்பாளர்கள் மீதும் பாஜக தலைமை வைத்திருந்த நம்பிக்கைக்காக நாங்கள் உறுதியாக உள்ளோம். இதற்காக, மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் 400 -க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம். தமிழகத்தின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.