அரசு முறை பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் டிஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை வரவேற்றார்.
பின்னர் வாகனத்தில் சென்ற பிரதமரை சாலையின் இருபுறமும் இந்திய பூட்டான் தேசிய கொடிகளை ஏந்தியபடி நின்ற பள்ளி சிறுமிகள் கையசைத்து வரவேற்றனர்.
இந்த பயணத்தின் போது பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக், பூடான் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
பூடான் பயணம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில், இந்தியா-பூடான் கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். பூட்டான் மன்னர் நான்காவது ட்ருக் கியால்போ மற்றும் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.