ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் இன்று தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இன்றையப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும். ஆனால் அதற்கு முன்னதாக 5 மணியில் இருந்து மற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷ்ராஃப், பின்னணிப் பாடகர்கள் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் சோனு நிகம் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.அதேபோல் இன்றைய தொடக்க விழாவில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் பங்கேற்கவுள்ளனர்.
2024 ஐபிஎல் கேப்டன்கள் :
சென்னை சூப்பர் கிங்ஸ் – ருத்ராஜ் கெய்க்வாட்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ்
மும்பை இந்தியன்ஸ் – ஹர்திக் பாண்டியா
ராஜஸ்தான் ராயல்ஸ் – சஞ்சு சாம்சன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கே.எல். ராகுல்
டெல்லி கேபிட்டல்ஸ் – ரிஷப் பந்த்
குஜராத் டைட்டன்ஸ் – சுப்மன் கில்
சன் ரைசஸ் ஐதராபாத் – பட் கம்மின்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் – ஷிகர் தவான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஸ்ரேயாஸ் ஐயர்