தமிழக பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் தொகுதிகளின் விவரங்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
1) திருவள்ளூர் (தனி)- V. பாலகணபதி
2) வட சென்னை -R.C. பால் கனகராஜ்
3) திருவண்ணாமலை -A. அஸ்வத்தாமன்
4) நாமக்கல் – கே.பி.ராமலிங்கம்
5) திருப்பூர் – A.P. முருகானந்தம்
6) பொள்ளாச்சி -K வசந்தராஜன்
7) கரூர் – V.V. செந்தில்நாதன்
8) சிதம்பரம் (தனி) -P. கார்த்தியாயினி
9) நாகப்பட்டினம் (தனி) – S.G.M. ரமேஷ்
10) தஞ்சை – M. முருகானந்தம்
11) சிவகங்கை – தேவநாதன் யாதவ்
12) மதுரை – பேராசிரியர். ராம சீனிவாசன்
13) விருதுநகர் – ராதிகா சரத்குமார்
14) தென்காசி -B. ஜான் பாண்டியன்
15) புதுச்சேரி – A. நமச்சிவாயம்