மருத்துவர் அய்யாவை பெருமைப்படுத்தியவர் பிரதமர் மோடி! - அன்புமணி ராமதாஸ் புகழாரம்
Aug 14, 2025, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மருத்துவர் அய்யாவை பெருமைப்படுத்தியவர் பிரதமர் மோடி! – அன்புமணி ராமதாஸ் புகழாரம்

Web Desk by Web Desk
Mar 22, 2024, 05:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவர் அய்யாவை, பிரதமர் மோடி பெருமைப்படுத்தியுள்ளார் என, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் தொடங்கி விட்டது. தேர்தலை எதிர்கொள்ள எப்போதோ தயாராகி விட்ட நாம், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியிருக்கிறோம். களத்தில் சிங்கங்களாய் துடிப்புடன் நீங்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதே அதற்கு எடுத்துக்காட்டு.

மக்களவைத் தேர்தல் தொடர்பான உங்களில் பலரின் எதிர்பார்ப்புகளுக்கும், தலைமையின் முடிவுக்கும் இடையே சிறிய இடைவெளி இருந்தது உண்மைதான். ஆனால், அய்யா எடுக்கும் எந்த முடிவுக்கும் பின்னால் ஒரு பொருள் இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்த வினாடியே அந்த இடைவெளி நிரப்பப்பட்டு விட்டது. மருத்துவர் அய்யா முடிவே எங்களின் முடிவு என்பதை அறிவித்து நீங்கள் களப்பணியை தொடங்கி விட்ட செய்திகள் மலைமலையாய் குவிந்து மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டுள்ளன.

ஓர் அரசியல் தலைவரின் எந்த முடிவும் தொலைநோக்கு கொண்டதாக இருக்க வேண்டும். 44 ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் அய்யா பொதுவாழ்க்கைக்கு வந்தது முதல் இன்று வரை மருத்துவர் அய்யா எடுத்த முடிவுகள் அனைத்துமே அப்படிப்பட்டவையாகத் தான் இருக்கின்றன. மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவும் அத்தகைய ஒன்று தான்.

கூட்டணி குறித்த முடிவு மக்களவைத் தேர்தலை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது; அடுத்து 2026 -ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையும் மனதில் கொண்டு தான் இருக்க வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு. இதை கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நான் கூறியிருக்கிறேன். அந்த நிலையில் எந்த மாற்றமுமில்லை.

மருத்துவர் அய்யா உங்களுக்கும், எனக்கும் அடிக்கடி சொல்லும் பாடம் ஒன்று தான். அது. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு தானே தவிர, அதிமுகவையும், திமுகவையும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பதற்கு அல்ல என்பது தான் மருத்துவர் அய்யா நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம் ஆகும். அதை மனதில் கொண்டு தான் இப்போது கூட்டணி அமைத்திருக்கிறோம்.

1996 -ம் ஆண்டு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வென்ற இடங்களின் எண்ணிக்கையும் நான்கு தான். தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக வென்ற இடங்களின் எண்ணிக்கையும் 4 தான். தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து ஊழல் வழக்குகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் அதிமுக முற்றிலுமாக முடங்கிக் கிடந்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற 1998 மக்களவைத் தேர்தலில் பா.ம.கவின் தலைமை அலுவலகத்திற்கு தேடி வந்து கூட்டணி அமைத்துக் கொண்டார் ஜெயலலிதா அம்மையார். அந்த தேர்தலில் அதிமுக, பா.ம.க. கூட்டணி 30 இடங்களில் வென்றது. அது இமாலய வெற்றி.

அதன்பின் 2001 -ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் மீண்டும் பா.ம.க. கூட்டணி அமைத்தது. அந்தத் தேர்தலில் பா.ம.க. உதவியுடன் அதிமுக அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா அம்மையார் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தார். மேற்கண்ட இரு முறையும் முடங்கிக் கிடந்த அதிமுகவுக்கு உயிர் கொடுத்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். ஆனால், இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிறகு அதிமுகவும், ஜெயலலிதாவும் பாட்டாளி மக்கள் கட்சியை எவ்வாறு நடத்தினர் என்பதை நாம் அறிவோம்.

2009 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக – பா.ம.க. கூட்டணி அமைந்தது. அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குகள் கிடைத்ததால் அதிமுக கூட்டணி 12 இடங்களில் வென்றது. ஆனால், அதிமுகவின் வாக்குகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைக்காததால் தமிழகம் மற்றும் புதுவையில் ஓர் இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.

அதிமுகவுடனும், திமுகவுடனும் நாம் கூட்டணி அமைக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குகள் முழுமையாக அக்கட்சிகளுக்குக் கிடைக்கும்; அவற்றின் வெற்றிக்கு வழிவகுக்கும். ஆனால், நாம் போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சிகளின் வாக்குகள் முழுமையாக நமக்கு கிடைக்காது. அதன் காரணமாகவே பல தருணங்களில் நாம் வெற்றி பெற முடியாமல் போகிறது.

2019 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் அதிமுக எந்த அளவுக்கு பலவீனமாக காணப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். அந்த நேரத்தில் பா.ம.கவைத் தேடி வந்து கூட்டணி அமைத்துக் கொண்டது அதிமுக.

அத்தேர்தலில் 22 சட்டப்பேரவை தொகுதிகளையும் அதிமுகவுக்கே விட்டுக் கொடுத்தது பா.ம.க. அதனால் தான் 9 இடங்களில் பா.ம.க. ஆதரவுடன் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. அப்போது பா.ம.க. கூட்டணி அமைக்கவில்லை என்றால் அதிமுக ஆட்சியை இழந்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. போராடி வந்தது. பாட்டாளி மக்கள் கட்சியால் தான் அதிமுக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது என்றாலும் கூட 10.5% இட ஒதுக்கீடு வழங்க அதிமுக மறுத்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் பல்வேறு நிபந்தனைகளுடன் இட ஒதுக்கீடு வழங்க அதிமுக முன்வந்தது.

எந்த நிபந்தனையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம், 2021 தேர்தலில் பா.ம.க.வுக்கு ஒரே ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை என்றாலும் கூட்டணிக்கு வருகிறோம் என வெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டுத் தருவதாக மருத்துவர் அய்யா கூறினார்கள். அதன்பிறகும் 23 தொகுதிகளை மட்டும் ஏற்றுக் கொள்வதாக ஒப்பந்ததில் கையெழுத்திட்டுக் கொடுத்த பிறகு தான் கடைசி நாளில் 10.50% இட ஒதுக்கீட்டை அதிமுக கொடுத்தது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மட்டும் முன்கூட்டியே திட்டமிட்டு, முறைப்படி 10.5% இட ஒதுக்கீடு வழங்கியிருந்தால் அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்காது. வன்னியர் இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி 2021 தேர்தலில் பா.ம.கவுக்கான இடங்கள் குறைக்கப்பட்டாலும், நாம் உண்மையாக உழைத்தோம். நம்மால் மட்டும் அதிமுக கூட்டணிக்கு 10%க்கும் கூடுதலான வாக்குகள் கிடைத்தன.

அதனால் தான் 2019 தேர்தலில் வெறும் 18% வாக்கு வாங்கிய அதிமுக, 2021 தேர்தலில் 33.29% வாக்குகளைப் பெற்றது. அதிமுக ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்ற 66 இடங்களில் 36 தொகுதிகளின் வெற்றிக்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் காரணம் ஆகும். ஆனால், அதிமுகவின் வாக்குகள் பா.ம.க.வுக்கு முழுமையாகக் கிடைக்காததால் 5 இடங்களில் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடிந்தது. இந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது.

ஆனால், வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கியதால்தான் வெற்றி பெற முடியவில்லை என்று இரண்டாம் கட்ட தலைவர்களைக் கொண்டு அதிமுக அவதூறு பரப்புரை மேற்கொண்டது. 2021 -ம் ஆண்டு தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு காரணம். அவர்களின் உள்கட்சி மோதல் தான். ஆனால், அதிக வாக்குகளை பெற்றுக் கொடுத்த பா.ம.க. மீது பழி போட்டது. அதிமுக வாக்குகள் சரியாக நமக்கு வந்திருந்தால் 15 இடங்களை நாம் வென்றிருக்க முடியும். ஆனால், அதற்கு அதிமுகவும், அதன் தலைமையும் ஒத்துழைக்கவில்லை என்பது தான் உண்மை.

வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு கொடுத்தது நாங்கள் தான் என்று இப்போது கூறும் அதிமுக, கடந்த காலங்களிலும் அதே நிலைப்பாட்டில் தான் இருந்திருக்க வேண்டும். வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறிய போது, புதிய சட்டத்தை இயற்றி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி ஒருமுறையாவது வலியுறுத்தினாரா? இல்லை.

மேலும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மூலமாவது இக்கருத்தை வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் இது குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அமைதி காத்தது அதிமுக. வன்னியர்கள் மீதான அவர்களின் அக்கறை அவ்வளவு தான்.

திமுகவுடனான நமது கூட்டணி அனுபவமும் இத்தகையது தான். 2006 -ம் ஆண்டில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 18 உறுப்பினர்களைக் கொண்ட பா.ம.க. நிபந்தனையின்றி ஆதரவு அளித்தது. ஆனால், அதற்கான நன்றிக்கடனை திமுக நமக்குக் காட்டவில்லை.

இப்போதும் கூட வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த இரு ஆண்டுகளாக திமுக அரசை பலமுறை வலியுறுத்திய போதிலும், அதற்காக எந்த நடவடிக்கையையும் வன்னியர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு எடுக்கவில்லை. அதனால் தான் வன்னியர் இட ஒதுக்கீடு சாத்தியமாகவில்லை. இப்படித் தான் இரு திராவிடக் கட்சிகளுடனான கூட்டணி அனுபவங்களும் ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்கத் தொடங்கியதிலிருந்து இன்று வரை நமது வாக்குகளால் திமுகவையும், அதிமுகவையும் ஆட்சியில் அமர்த்துகிறோம். அதனால், நமக்கோ, மக்களுக்கோ எந்த பயனும் இல்லை.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோருவதாக இருந்தாலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோருவதாக இருந்தாலும், நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்தக் கோருவதாக இருந்தாலும், தடுப்பணைகளை கட்டுங்கள் என்று வேண்டுவதாக இருந்தாலும், உழவர்களின் நிலங்களை பறிக்காதீர்கள் என மன்றாடுவதாக இருந்தாலும், கரும்புக்கும், நெல்லுக்கும் நியாயமான கொள்முதல் விலை வழங்குங்கள் என்று கோருவதாக இருந்தாலும், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதாக இருந்தாலும், மக்களைக் காக்க மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள் என்று வலியுறுத்துவதாக இருந்தாலும் நம்மால் ஆட்சிக்கு வந்தவர்களிடம் நாம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றியமைத்து, நமது கோரிக்கைகளை நாமே நிறைவேற்றிக் கொள்வது எப்போது?

அதனால் தான், 2026 -ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. அதற்கான செயல்திட்டத்தின் ஓர் அங்கம் தான் இன்றையத் தேர்தல் கூட்டணி ஆகும். தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான தலைவர் மருத்துவர் அய்யாதான். அவர் தான் பல்வேறு போராட்டங்களை நடத்தி தேசிய அளவிலும், மாநில அளவிலும் 6 வகையான இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்துக் கொடுத்தார்.

மருத்துவர் அய்யாவின் கனவான தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி என்பதை நனவாக்க வேண்டும். இந்த உண்மையை எனது அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களின் உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன். உங்களின் உணர்வுகளுக்கு எதிராக எந்த முடிவையும் நான் இதுவரை எடுத்ததில்லை. இனியும் எடுக்க மாட்டேன்.

இந்தியாவின் மிக உயர்ந்த அரசியல் தலைவரும், சமூகநீதிப் போராளியும் மருத்துவர் அய்யா தான். மருத்துவர் அய்யா பெருமைகளையும், சிறப்புகளையும் இந்தியாவின் மிக அதிகாரம் மிக்க பதவியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி அறிந்திருக்கிறார்; உணர்ந்திருக்கிறார். சேலத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மட்டுமின்றி பல்வேறு தருணங்களில் மருத்துவர் அய்யா நமது பிரதமர் பெருமைப் படுத்தியிருப்பதையும், மரியாதை செய்திருப்பதையும் நான் பார்த்து இருக்கிறோம்.

ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த இந்த இரு கட்சிகளும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு உரிய மதிப்பையும், மரியாதையையும் வழங்கத் தவறியதுடன், பல்வேறு தருணங்களில் உதாசீனப்படுத்தின என்பதை தமிழ்நாட்டு அரசியலில் தெளிவும், புரிதலும் கொண்ட நீங்கள் நன்றாக அறிவீர்கள். இதை இன்னும் எத்தனை காலத்திற்கு தான் சகித்துக் கொண்டும், பொறுத்துக் கொண்டும் இருக்க முடியும்?

தமிழ்நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற கடமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு முன்பாக, மிகவும் முக்கியமான 2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கும், நம்முடன் கூட்டணி அமைத்திருக்கும் பாரதிய ஜனதா உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் வெற்றி தேடித்தர வேண்டியது கட்டாயம் ஆகும். இதை உணர்ந்து, ஏப்ரல் 19 -ம் நாள் நடைபெறவுள்ள வாக்குப்பதிவை மனதில் கொண்டு வேட்கையுடன் களப்பணியாற்றுவோம், அதன் பயனாக வெற்றிகளைக் குவிப்போம் என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modianbumani
ShareTweetSendShare
Previous Post

கடற்கரையில் இருந்து கற்களை எடுத்தால் ரூ.2 லட்சம் அபராதம்!

Next Post

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ராஜஸ்தான் வீரர்!

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies