பூடான் அரசு வழங்கிய உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பூடான் மக்களுக்கு, குறிப்பாக இளம் குழந்தைகளுக்கு, மறக்கமுடியாத வரவேற்பு அளித்ததற்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வழி முழுவதும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களின் அன்பை நான் பெரிதும் மதிக்கிறேன்.
திம்புவில் உள்ள கம்பீரமான தாஷிச்சோட்ஜோங் அரண்மனையில் கிடைத்த வரவேற்பு மற்றும் பாரம்பரிய சிப்ட்ரல் ஊர்வலம் பூடானின் வளமான கலாச்சாரத்தின் ஒரு காட்சியாக விளங்குகிறது.
பூடான் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான வகையில் இருந்தது. இந்தியா-பூடான் நட்புறவை மதிப்பாய்வு செய்தோம். மேலும் இரு தரப்பு உறவு, கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம். இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா-பூடான் உறவுகளுக்கு வலு சேர்க்கும்.
பூட்டான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். பூடான் வழங்கிய உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Honoured to be conferred with 'Order of the Druk Gyalpo' Award by Bhutan. I dedicate it to 140 crore Indians. https://t.co/gNa7YlcFfG
— Narendra Modi (@narendramodi) March 22, 2024