உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் கோயில் கருவறையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 13 பூசாரிகள் காயமடைந்தனர்.
இந்த விபத்து தனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோவிலில் நடந்த விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்த பக்தர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளை வழங்க உள்ளாட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
उज्जैन के महाकाल मंदिर में हुई दुर्घटना अत्यंत पीड़ादायक है। इस हादसे में घायल सभी श्रद्धालुओं के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की देखरेख में स्थानीय प्रशासन पीड़ितों की हरसंभव मदद में जुटा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 25, 2024