கிரிக்கெட் வரலாற்றில் 1 பந்தில் 286 ரன்கள் : எப்படி சாத்தியம் ?
Oct 2, 2025, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிரிக்கெட் வரலாற்றில் 1 பந்தில் 286 ரன்கள் : எப்படி சாத்தியம் ?

Web Desk by Web Desk
Mar 29, 2024, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட் விளையாட்டு யூகிக்கமுடியாத ஒரு விளையாட்டு என்றே சொல்லலாம். ஒருவர் அவுட் ஆவார் என்று எதிர்பார்க்கும் போது திடீரென அவர் சிக்சர் அடிப்பதும், அவுட் ஆனா பந்து நோ பால் ஆவதும் கிரிக்கெட் சகஜமே.

எப்போது என்ன நடக்கு என்றே தெரியாமல் இருப்பதாலேயே இவ்விளையாட்டு அனைவருக்கும் பிடித்த விளையாட்டாக உள்ளது.

இன்றைய கிரிக்கெட்டில் ஒரே பந்தில் 7 ரன்கள் அடித்தது பார்த்திருப்போம், ஏன் ஒரு பந்துகூட வீசாமல் விக்கெட் விழுந்ததை பார்த்திருக்கிறோம் அந்த வகையில் ஒரே பந்தில் 286 ரன்கள் எடுத்த நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

இது எப்படி சாத்தியம் ? 1 பந்தில் 286 ரன்கள் எப்படி எடுத்திருக்க முடியும் ? என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கும் அதற்கான விடையை இந்த பதிவில் காண்போம்.

1890 ஆம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பன்பர்ரி என்ற இடத்தில் விக்டோரியன் அணிக்கும் அதன் பக்கத்து ஊரில் உள்ள ஸ்கிராட்ச் அணிக்கும் இடையே ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அந்த போட்டியில் ஸ்கிராட்ச் அணியின் முதல் பந்தில் ஆஸ்திரேலியா வீரர் பந்தை தூக்கி வானத்தைப் நோக்கி அடித்தார். அது அந்த மைதானத்தில் இருந்த ஒரு பெரிய ஜார்ரா மரத்தின் மேல் கிளையில் சென்று விழுந்தது.

அந்த காலகட்டத்தில் விளையாட்டு மைதானத்தில் மரங்கள் இருப்பது சகஜமே. ஸ்கிராட்ச் அணி அம்பையரிடம் சென்று இதனை தொலைந்த பந்தாக அறிவிக்க வேண்டுமென்று வற்புருத்தியது.

ஆனால் அந்த பந்து அம்பையரின் கண்களுக்கு தெரியும் வகையில் மரத்தின் மேல் இருந்ததால் இது தொலைந்த பந்து இல்லை என்று கூறிவிட்டனர். அப்போது ஒரு பாலுக்கு 4 ரன்கள் தான் எடுக்க வேண்டுமென்று எந்த விதிமுறைகளும் இல்லை.

ஆகையால் களத்திலிருந்த விக்டோரியா அணி வீரர்கள் தொடர்ந்து ஓடி ரன்களை எடுத்து கொண்டே இருந்தார்கள். இருவரும் கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் அளவு ஓடினார்கள்.

எதிர் அணி மரத்தில் ஏறி பந்தை எடுக்க முடியாமல், துப்பாக்கியால் சுட்டு கீழே விழ வைத்தது. அதனை எடுத்து ஸ்டம்பில் அடிக்கும் முன்னர் விக்டோரியா அணி 286 ரன்களை எடுத்துவிட்டது. இதனால் விக்டோரியா அணி அப்போட்டியில் வெற்றிப்பெற்றது.

இந்த செய்தி 1894 ஆம் ஆண்டு ‘The pall mall gazette’ என்ற விளையாட்டு செய்தி பத்திரிக்கையின் மூலம் அனைவர்க்கும் தெரியவந்தது.

என்னத்தான் கிரிக்கெட்டை இங்கிலாந்து கண்டுப்பிடித்தாலும் அப்போதிலிருந்து இப்போது வரை ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்து வரும் அணியாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் இதுவும் ஒரு சாதனையாக அமைந்துள்ளது.

மேலும் இதுதான் கிரிக்கெட் சரித்திரத்தில் ஒரே பாலில் அதிகம் எடுக்கப்பட்ட ரன்கள் என்று கூறப்படுகிறது. இப்போது இருக்கும் விதிமுறைகளில் இவ்வளவு ரன்கள் எடுப்பது என்பதும் முடியாத காரியமே.

Tags: Cricket286 runs in 1 ball in cricket history: How is it possible?
ShareTweetSendShare
Previous Post

300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டாக்ஸி! – ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து!

Next Post

தமிழக பா.ஜ.க, நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி மாலை கலந்துரையாடுகிறார்!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies