கர்நாடகாவில் உள்ளஅனைத்து தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டம் பெங்களூரூவில் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா,ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டனர். கர்நாடக மக்களுக்கு சிறந்த செய்தி ஒன்றை வழங்கியுள்ளோம். எங்கள் கூட்டணி 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, முதன்முறையாக, தேவே கவுடா பாஜகவுக்கு ஆதரவு அளித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.
எனவே, கர்நாடகா, குறிப்பாக, தெற்கு கர்நாடகாவில், பல இடங்களில், ஜே.டி.எஸ்., வலுவாக இருப்பதாக நம்புகிறேன். அவர்களின் வாக்குகளையும் பெறுவோம். 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் மோடியை பிரதமராக்குவோம் என தெரிவித்தார்.