தமிழகத்தில் ஆளும் கட்சி மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மக்களவைத் தேர்தலுக்கான பூத் மட்டத்தில் களப் பணிகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
திருவாரூரைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) மற்றும் ஜல் ஜீவன் மிஷன் போன்ற திட்டங்களைப் பற்றி பேசினார். இந்தத் திட்டங்கள் தங்கள் வேலையை எளிதாக உதவியது என்று அவர் கூறினார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, தமிழகம் வரும்போது வணக்கம் சொல்லி பேச்சை தொடங்குகிறேன். ஆனால் இன்று நான் சொல்லும் வணக்கம் வித்தியாசமானது. ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளிக்கு சொல்லும் வித்தியாசமான வணக்கம் இது.
உங்களைப்போலவே வாழ்க்கையின் பெரும் பகுதியை பாஜக தொண்டனாக கழித்திருக்கிறேன். கடின உழைப்பு நம் அனைவரையும் வளர்ச்சிக்கு அழைத்து செல்லும் என்றார்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவதைக் குறிப்பிட்ட மோடி, பெண்களால் அதிகம் விரும்பப்படும் மற்றும் பேசப்படும் திட்டங்களை பெண் தொண்டரிடம் தெரிந்து கொள்ள முயன்றார். கட்சித் தொண்டர்கள் அடிமட்ட அளவில் பணியாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக ஆட்சியை புரட்டிப் போடப் போவதாக அனைத்து அரசியல் கருத்துக்கணிப்புககளும் தெரிவிக்கின்றன என்றும், ஆளும் கட்சி மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.