ஊழலை மறைக்கவே ‘இண்டி’ கூட்டணி பேரணி நடத்துவதாக பாஜக எம்.பி. சுதன்ஷூ திரிவேதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, “பேரணியில் பங்கேற்கும் காங்கிரஸ், திமுக மற்றும் ஆர்ஜேடி கட்சி தலைவர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் 2014-க்கு முன்பு பதிவு செய்யப்பட்டவை. ஆனால், அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காக தங்கள் மீது மோடி அரசு ஊழல் பதிவு செய்து உள்ளதாக பொய் சொல்லுகின்றனர்.
திருடர்கள் மற்றும் வஞ்சகர்கள் என மக்களால் குப்பையில் தள்ளப்பட்டத் தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்து உள்ளனர். அவர்களின் தலைவரான லாலு பிரசாத் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்.
தங்களது பழைய பாவத்தை மறைக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். அவர்கள் தான் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என சொன்னவர்கள்.
ஜனநாயகத்தை பாதுகாக்க பேரணி நடத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், தங்கள் ஊழலை மறைக்கவும், வாரிசு அரசியலை பாதுகாக்கவுமே தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர். இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.