திரிபுரா மக்களவை தேர்தல் மற்றும் 7-ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்களை பாஜக வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு திரிபுராவில் ஏப்ரல் 19 ஆம் தேதியும், கிழக்கு திரிபுராவில் ஏப்ரல் 26 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் திரிபுரா மக்களவை தேர்தல் மற்றும் 7-ராம்நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்களை பாஜக வெளியிட்டுள்ளது.
அதன்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் பிரச்சார பட்டியலில் இடம்பெற்றுள்னர்.