போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மையம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும் : அண்ணாமலை உறுதி!
May 9, 2025, 11:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மையம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும் : அண்ணாமலை உறுதி!

தமிழகத்துக்குத் திமுக வேண்டாம்: அண்ணாமலை பேச்சு!

Web Desk by Web Desk
Apr 3, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நொய்யல் நதியை மீட்டெடுக்க பிரதமர் மோடி, 970 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடையார்பாளையம், கொங்கு நாடு கல்லூரி, அப்பநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கதிர்நாயக்கன்பாளையம் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

கடந்த 2014 ஆம் ஆண்டு, 289 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதன்முறையாகப் பிரதமர் பொறுப்பேற்ற நமது பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி, 2019 ஆம் ஆண்டு, 303 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இரண்டாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்றார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 400 பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மீண்டும் பாரதப் பிரதமராக பொறுப்பேற்பார் என்பது, குழந்தைகள் முதற்கொண்டு அனைவரும் அறிந்த உண்மை.

இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாகப் பொலிவிழந்து இருக்கும் கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியை மீட்டெடுக்க, நீர் நிலைகளைச் சீரமைத்து தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய, தொழிற்சாலைகள், விவசாயிகள், தண்ணீர் பிரச்சினைகளைத் தீர்க்க, கோவையின் சாலை வசதிக்கு, ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு, மேம்பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, கோயம்புத்தூர் மக்கள், பாதுகாப்பாக, நிம்மதியாக வசிக்க வேண்டும் என்பதற்காக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நேரடிப் பார்வையில் நமது கோவை என்றும் இருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நொய்யல் நதியை மீட்டெடுக்க, நமது பிரதமர் மோடி அவர்கள், 970 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். கோவை மக்கள் அன்பையும் ஆதரவையும் பெற்று, பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றதும், அந்தப் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதனைக் கண்காணித்து, நொய்யல் நதியை மீட்டெடுப்போம்.

ஜூன் 4, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த தினத்திலிருந்து நூறு நாட்களுக்குள், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு மையம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். கல்லூரிகள் நிறைந்த கோவையில், நமது இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகளுக்கு, நமது கண் முன்னால் பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

எனவே, போதையில்லா கோயம்புத்தூர் நகரை உருவாக்குவோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட முதல் படியாக, இந்தத் தேர்தல் அமையும். தாமரைக்கு விழும் ஒவ்வொரு வாக்கும், தமிழகத்துக்குத் திமுக வேண்டாம் என்பதைச் சொல்லும் வாக்குகள்.

கோயம்புத்தூருக்காக, கோயம்புத்தூர் பொதுமக்களுக்காக சேவை செய்ய வாய்ப்பினை உங்கள் வீட்டுப் பிள்ளை இந்த அண்ணாமலைக்கு வழங்குமாறும், தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்காகவும், கோவையின் வளர்ச்சிக்காகவும் கோவை நாடாளுமன்றத் தொகுதியின், வாக்குப் பதிவு எந்திரத்தில் முதலில் இருக்கும் நமது தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி அனைவரும் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலையாகிய என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

Tags: TNBJP annamalai election campaignbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ஹர்திக் மீது கடுப்பான ஆகாஷ் அம்பானி : காப்பாற்றிய சச்சின் – நடந்தது என்ன ?

Next Post

தைவானில் பூகம்பம்: 4 பேர் பலி, 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

Related News

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில நகரங்களை குறி வைத்து பாக். தாக்குதல் – வானிலேயே இடைமறித்து பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் கவலை அளிக்கிறது – சீனா

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் – சிறப்பு விருந்து!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்!

பாக்.ராணுவம் விடிய விடிய தாக்குதல் – வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கம்!

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது – ஜே.டி.வான்ஸ்

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி

இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து!

கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல்!

ஆப்ரேஷன் சிந்தூர் 3.0 – பிரதமர் மோடியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை!

போர் பதற்றம் – ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்!

பதுங்கு குழியில் பாகிஸ்தான் பிரதமர் – அசிம் முனீர் கைது!

நிலைகுலைந்த பாகிஸ்தான் ராணுவம் : குவெட்டா நகரை கைப்பற்றியது பலூசிஸ்தான் விடுதலைப் படை

ஆப்ரேஷன் சிந்தூர் எப்படி? : பழி வாங்கிய இந்தியா –  பதறிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அந்நாட்டு தூதரகம் உத்தரவு!

காஷ்மீரை வைத்து சூதாட்டம் : பாகிஸ்தானுக்கு பேரழிவை ஏற்படுத்திய அசிம் முனீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies