இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளன.
இதில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் என்றே சொல்லலாம்.
அதில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் பிளவு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த பிரச்சனையின் தொடக்கமே ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பை குஜராத் அணியில் இருந்த ஹர்டிக் பாண்டியவிடம் கொடுத்தது தான்.
கடந்த வருடன் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றது. அந்த ஏலத்திற்கு முன்பே குஜராத் அணியில் இருந்து ஹர்டிக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்ப வந்ததாகவும் ஹர்டிக் பாண்டியா தான் கேப்டன் என்றும் அறிவிப்பு வந்தது.
மேலும் இது ரோகித் ஷர்மாவுக்கே தெரியாது என்றும் அணியில் யாரிடமும் சொல்லலாம் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
அதற்கு ஏற்ப மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களான பும்ரா, சூரிய குமார் யாதவ் தங்களின் சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவுகளும் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதளத்தில் உள்ள பின்தொடர்பவர்களுக்கு லட்சகனில் அந்த அணியில் இருந்து வெளியே வந்தனர்.
இப்படி நடந்துகொண்டிருக்க ஐபிஎல் தொடர் தொடங்கியதும் எல்லாம் சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கூச்சலிட்டு வந்தனர்.
அதேபோல் ஹர்திக் பாண்டியவும் ரோகித் சர்மாவை பௌண்டரி லைன் பக்கம் நிற்கவைத்து அவரை கடுமையாக பேசியது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.
அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர்.
அப்போது பீல்டிங்கில் நின்றிருந்த ரோகித் சர்மா, ரசிகர்களை பார்த்து ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக சத்தமிடாதீர்கள் என கையசைத்து கோரிக்கை வைத்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியது.
அதேபோல் ஹைட்ரபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்காவை ஹர்திக் பாண்டியா அவமதித்தாக வீடியோ வைரலானது.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியே அடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினமானதாகும்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி அணியின் மீது காடும் கோபமாக இருப்பதாக தெரியவருகிறது. இவர் மைதானத்திலேயே மும்பை இந்தியன்ஸ் வீரர்களை திட்டியதாகவும் தெரிகிறது.
போட்டி முடிந்தவுடன் ஆகாஷ் அம்பானி சச்சின், ரோகித், ஹர்டிக் பாண்டியா மற்றும் பல வீரர்களை அழைத்து அவர்களிடம் கோபமாக பேசியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே அணியாக விளையாடவில்லை என்றும் இது போல விளையாடினாள் தங்களால் என்று கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கை விட்டதாக தெரியவருகிறது.
அதேபோல் ரோகித் சர்மா பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா வந்ததிலிருந்து தான் இப்படி தொடர்ந்து பிரச்சனை மேல் பிரச்சனை என்று இப்படி தொடர்ந்து சென்றால் ஹர்திக் பாண்டியவை வெளியே அனுப்பிவிடுவேன் என்றும் கூறியதாக தெரிகிறது.
அப்போது சச்சின் டெண்டுல்கர் அனைவரையும் அழைத்து சமாதானம் படுத்தியது மட்டுமில்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானியையும் சச்சின் டெண்டுல்கர் சமாதானம் படுத்தியதாக தெரியவருகியது.