தோல்வி பயம் காரணமாக அமேதி தொகுதியில் இருந்து வயநாட்டிற்கு ராகுல் காந்தி மாறியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமேதி தொகுதியில் ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி உள்ளிட்டோர் போட்டியிட்டுள்ளனர். அந்த தொகுதியில் ராகுல் காந்தி களம் இறங்கி இருக்க வேண்டும்.
ஆனால் அமேதி தொகுதியில் மீண்டும் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார் என்பதால் காங்கிரசுக்கு அச்சம் வந்துவிட்டது. அதன் காரணமாக அமேதி தொகுதி வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் கட்சி காலம் தாழ்த்தி வருகிறது.
வயநாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் அதிகம் உள்ளதால் ராகுல் காந்தி அங்கு போட்டியிடுகிறார். ஆனால் அவருக்கு போட்டி கடுமையாக இருக்கும். வயநாட்டில் கேரள பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன், சிபிஐ சார்பில் அன்னிராஜா போட்டியிடுவதையும் ரவிசங்கர் பிரசாத் சுட்டிக்காட்டினார்.