பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைந்ததில் இருந்து , சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைக்கான செலவினங்களை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட நாட்டின் உள்கட்டமைப்புத் துறைகள் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது.
அதில் தேசிய மெட்ரோ நெட்வொர்க்குகளில் வளர்ச்சி குறித்து பார்ப்போம்.
ரயில்வே, சாலைகள் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு கூடுதலாக, போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக மெட்ரோ நெட்வொர்க்கின் விரிவாக்கத்தை பாரத பிரதமர் மோடியின் ஆட்சி முன்னெடுத்துள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கு முன்பு, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் குருகிராம் போன்ற ஒரு சில நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ சேவைகள் இருந்தன.
ஆனால் தற்போது 2023 ஆம் ஆண்டின் நிலவரப்படி, நாடு முழுவதும் 17 நகரங்களில் மெட்ரோ சேவைகள் செயல்படுகின்றன. சமீபத்தில் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் மெட்ரோ சேவை தொடங்கியுள்ளது. மேலும், டெல்லியை மீரட்டுடன் இணைக்கும் RRTS நடைபாதையும் விரைவில் முடிவடைகிறது.
தற்போது நாடு முழுவதும் பீகாரில் உள்ள பாட்னா, மத்திய பிரதேசத்தில் உள்ள போபால் மற்றும் இந்தூர் போன்ற 19 நகரங்களில் மெட்ரோ கட்டுமானம் மற்றும் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மெட்ரோ திட்டங்களுக்காக மத்திய அரசு சுமார் ₹1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்க கணிசமான நிதி முதலீடு தேவைப்படுகிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ், உள்கட்டமைப்புக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக மூலதனச் செலவு பெறும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் நாட்டின் மூலதனச் செலவு தோராயமாக ₹1.9 லட்சம் கோடியாக இருந்தது. இது தற்போது ₹11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.