விவசாயிகளின் நண்பன் பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த 10 ஆண்டுகளில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மேற்கொண்ட அனைத்துத் துறை முயற்சிகளின் பலன்கள் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.
பாரத பிரதமர் மோடியின் அரசாங்கம் விவசாயிகளின் நிலைமைகளை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் பல முயற்சிகளும், திட்டங்களும் செய்துள்ளது. அதில் ஒன்று தான் நானோ யூரியா திட்டம். உலகின் முதல் நானோ யூரியா திரவ ஆலையை பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள கலோலில் 2022 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.
இதன் மூலம் உலகிலேயே நானோ யூரியாவின் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. பெரும்பாலும் விவசாயிகள், பயிர் நல்ல விளைச்சல் தர உரங்களையே பயன்படுத்துகின்றனர். அதிலும் 2020 ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் யூரியாவின் நுகர்வு 33 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்துள்ளது. மேலும் யூரியாவின் பயன்பாடு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
யூரியா, விளைச்சலை அதிகரிக்கும் என்றாலும், அது நிலத்தைக் கெடுக்கும் என்பது மறுக்கப்படாத உண்மை. இதற்காக இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு (IFFCO) அமைப்பு ஆறு ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின் 2021 ஆம் ஆண்டு நானோ யூரியாவை அறிமுகப்படுத்தியது.
45 கிலோ யூரியா பயன்படுத்த வேண்டிய இடத்தில் விவசாயிகள் தற்ப்போது நானோ யூரியா 500 மில்லி பாட்டிலைப் பயன்படுத்தினால் போதுமானதாக உள்ளது. வழக்கமான யூரியாவைவிட இது பல விதங்களில் சிறந்ததாகவும் உள்ளது.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 10 மடங்கு உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இந்தியா பல நாடுகளுக்கு உணவு தானியங்களை வழங்கியது. இது சாதாரண சாதனை அல்ல, மாபெரும் சாதனை.
அதேபோல் பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், வேளாண் திட்டம், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம், என மேலும் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, பொன்னான விவசாயத் துறையின் மகத்தான பார்வையை திரும்பிப் பார்க்க முடியும். பாரத பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் துணை நிற்கிறது என்பது தெரிகிறது.