தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான தண்ணீரை தடையின்றி திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
ஆனால், தற்போது கோடை காலம் நிலவி வருவதாலும், பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாலும், தண்ணீர் திறந்துவிடமுடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
அப்போது,3.6 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அந்த கோரிக்கையையும் கர்நாடக அரசு நிராகரித்துவிட்டது. தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்பதில் கர்நாடகம் உறுதியாக இருந்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த போக்கால், தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.