மாதவி லதா பங்கேற்ற Aap Ki Adalat நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா டிவியின் ரஜத் ஷர்மா தொகுத்து வழங்கும் பிரபல ‘ஆப் கி அதாலத்’ நிகழ்ச்சியில் ஹைதராபாத் பாஜக வேட்பாளர் கொம்பெல்லா மாதவி லதா பங்கேற்றதை ஹைலைட் செய்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மாதவி லதா ஜி, உங்களின் ‘ஆப் கி அதாலத்’ நிகழ்ச்சி விதிவிலக்கானது. நீங்கள் ஆர்வத்துடன் இதனை செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே பிரதமர் மோடிக்கு மாதவி லதா நன்றி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் தொகுதியில் AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு எதிராக பாஜக சார்பில் 49 வயதான கொம்பெல்லா மாதவி லதா போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.