பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பிரபல தமிழ்த் திரையுலகக் கலைஞர் ஆர்த்தி கணேஷ், பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக நாளுநாளுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, மாற்றுக் கட்சியினர் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, மக்கள் சேவையை செய்வதற்கு, தமிழ் திரையுலக பிரபலங்களும் பாஜகவில் இணைகின்றனர்.
அந்த வகையில், பிரபல தமிழ்த் திரையுலகக் கலைஞர், ஆர்த்தி கணேஷ், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சித் திறனால் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
ஆர்த்தி பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். ஆர்த்தி நடிகர் கணேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருடைய கணவர் கணேஷ் பாஜக-வில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.